ஆத்தூர் ரேசன் கடை அங்கன்வாடி மையம் ஊராட்சி அலுவலகம் திறப்பு

6பார்த்தது
ஆத்தூர் ரேசன் கடை அங்கன்வாடி மையம் ஊராட்சி அலுவலகம் திறப்பு
சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கல்பகனூர், அப்பம்ம சமுத்திரம், தென்னங்குடி பாளையம், கல்லாநத்தம், அம்மம்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூபாய் 13.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட நியாய விலைக் கடைகள், துலுக்கனூர் மற்றும் அம்மம்பாளையம் நரிக்குறவர் காலனி பகுதிகளில் ரூபாய் 14.00 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடங்கள், மற்றும் கல்லாநத்தம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 30.00 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட ஊராட்சி அலுவலக கட்டிடம் ஆகியவற்றை சேலம் கிழக்கு மாவட்ட கழக செயலாளர், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் சிவலிங்கம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அன்புராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பல்வேறு அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி