ஆத்தூர் ஸ்ரீசக்தி செல்லியம்மன் திருத்தேர் விழா

63பார்த்தது
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே புதுக்கொத்தாம்பாடி கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு சக்தி மாரியம்மன் திருக்கோவிலில் திருத்தேர் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு கடந்த 12ஆம் தேதி கணபதி ஹோமம், காப்பு கட்டுதல், சக்தி அழைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று முடிந்த நிலையில் நேற்று (மார்ச்.13) சக்தி செல்லியம்மன் மூலவர் சுவாமி திருத்தேரில் ஏற்றப்பட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு திருத்தேருக்கான சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர் திருத்தேரை முக்கிய வீதிகள் வழியாக தாரை தப்பட்டை உடன் செண்டை மேளதாளம் முழங்க வானவேடிக்கையுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். திருத்தேர் பக்தர்களின் வெள்ளத்தில் பவனியாக ஊர்ந்து வலம் வந்து கொண்டு இருக்கிறது. இந்த தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் தேரை வடம் பிடித்து இழுத்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினார்கள்.
Job Suitcase

Jobs near you