சேலம் மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள பழமையான, பிரசித்தி பெற்ற வெள்ள விநாயகர் திருக்கோவிலில் புனரமைக்கப்பட்டு குடமுழுக்கு விழா வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 16-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தீர்த்தக் குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. கடைவீதி பகுதியில் தொடங்கிய முளைப்பாரி ஊர்வலம் ராணிப்பேட்டை வழியாக கோவிலை வந்தடைந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு நேர்த்திக்கடனை செலுத்தினர்.