சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஏத்தாப்பூரில் உள்ள முத்துமலை முருகன் கோவிலுக்கு செல்லும் வாகனங்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் சுங்க கட்டணம் வசூலித்ததை எதிர்த்து பாஜக மாநில இளைஞரணி தலைவர் எஸ். ஜி. சூர்யா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சுங்க கட்டணம் வசூலிக்க தடை விதித்து உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. நீதிமன்ற உத்தரவுக்கு நன்றி தெரிவித்த எஸ். ஜி. சூர்யா, கோவில் நலனுக்காக பாஜக எப்போதும் துணை நிற்கும் என தெரிவித்தார்.