சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் முருகனின் வீட்டில், பிரம்ம கமலம் செடியில் நேற்று இரவு 10:00 மணிக்கு மேல் 200க்கும் மேற்பட்ட பூக்கள் ஒரே நேரத்தில் மலர்ந்துள்ளன. கடந்த ஆண்டு 150 பூக்கள் மலர்ந்த நிலையில், இம்முறை அதிக எண்ணிக்கையில் பூக்கள் மலர்ந்ததைக் கண்டு குடும்பத்தினர் பக்தி பரவசம் அடைந்தனர். இந்த பூக்கள் மலரும் போது என்ன வேண்டினாலும் நடக்கும் என்பது ஐதீகம் என்பதால், குடும்பத்தினர் பூஜை செய்து வேண்டினர். இந்த அதிசயத்தைக் காண சுற்றுப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர்.