ஆத்தூர் சிற்றோடையில் பைக் விழுந்து பேருந்து ஓட்டுனர் பலி

1பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம், கணியாமூர் பகுதியைச் சேர்ந்த வினோத் என்பவர் சேலம் மாவட்டம் ஆத்தூர் தெற்காடு பகுதியில் உறவினர் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது, வளைவுப் பகுதியில் நிலைதடுமாறி சிற்றோடையில் விழுந்து உயிரிழந்தார். இன்று காலை அப்பகுதி மக்கள் வினோத்தின் உடலைக் கண்டு தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத் துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி