சேலம் மாவட்டம் ஆத்தூர் ராசிபுரம் பிரிவு சாலை பகுதியில் உள்ள கிரெடிட் அக்சஸ் கிராமின் குழு அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியரின் இருசக்கர வாகனம் திருட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊழியர் தனது வாகனத்தை அலுவலகத்தில் நிறுத்திவிட்டு பணிபுரிந்த நிலையில், காலை வந்து பார்த்தபோது வாகனம் சிறிது தூரம் தள்ளி கீழே கிடந்துள்ளது. இதைத் தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, மர்ம நபர் ஒருவர் வாகனத்தை திருட முயன்றது தெரியவந்துள்ளது. இந்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.