சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சியில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்ததை அடுத்து, பொதுமக்கள் மற்றும் நகர் மன்ற உறுப்பினர் இணைந்து 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ் 19 சிசிடிவி கேமராக்களைப் பொருத்தியுள்ளனர். இதன் மூலம், செல்லியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பூ வியாபாரி பஞ்சவர்ணம் தனது சைக்கிளை பிள்ளையார் கோவில் வளாகத்தில் நிறுத்திச் சென்றபோது திருடப்பட்டது பதிவாகியுள்ளது. சிசிடிவி காட்சிகளில் முதியவர் ஒருவர் சைக்கிளைத் திருடிச் செல்லும் காட்சி பதிவாகி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.