ஆத்தூர் கார் நிறுத்தியதில் ஏற்பட்ட பாமக மோதல் சிசிடிவி வைரல்

3பார்த்தது
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வடுகத்தம்பட்டி பகுதியில் பாமக நிர்வாகி சத்யராஜ் என்பவரது தந்தையின் துக்க நிகழ்வுக்கு வந்த சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அருள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது அன்புமணி தரப்பைச் சேர்ந்த ஆதரவாளர்கள் காரை வழிமறித்து தாக்குதல் நடத்தினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. அதில், பாக்கு உலர் வைக்கும் இடத்தில் அருள் தரப்பினர் காரில் வந்தபோது, அங்கிருந்து காரை வெளியேற்றுமாறு கூறியதாகவும், அதைத் தொடர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாகவும் பதிவாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி