சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஜெகன், இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றபோது, சேலத்தில் இருந்து கடலூர் நோக்கிச் சென்ற கார் அவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஜெகனுக்கு கால் முறிவு மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவருக்கு அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.