சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் உமையாள்புரம் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகள் மாதாந்திர கூட்டம் சாந்தி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், டிசம்பர் 3 ஆம் தேதி உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை கொடியேற்றி கொண்டாடுவது, திருச்சியில் டிசம்பர் 19 அன்று நடைபெற உள்ள தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநில மாநாடு, பேரணி, பொதுக்கூட்டத்திற்கு அனைவரும் பங்கேற்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. தாலுக்கா தலைவர் பாரதி, செயலாளர் காளிதாஸ், பொருளாளர் சபீதா உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர்.