ஆத்தூர்: கனமழையில் பக்தர்கள் மாரியம்மன் கோயிலில் தீச்சட்டி ஊர்வலம்

61பார்த்தது
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உடையார்பாளையம் முத்துமாரியம்மன் கோயிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு காப்பு கட்டுதல் நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன. இதைத் தொடர்ந்து, பக்தர்கள் கத்தி அலகு, நாக்கு அலகு, விமான அலகு குத்தியும், 100க்கும் மேற்பட்ட பெண்கள் தீச்சட்டி ஏந்தியும் ஊர்வலமாகச் சென்று நேர்த்திக்கடனைச் செலுத்தினர். அப்போது சூறைக்காற்றுடன் கனமழை பெய்தபோதும், அதைப் பொருட்படுத்தாமல் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

தொடர்புடைய செய்தி