சேலம் மாவட்டம், ஆத்தூர் அம்பேத்கர் நகரில் உள்ள பழமையான தாய் கருமாரியம்மன் திருக்கோவிலில், கடந்த 27ஆம் தேதி காப்புகட்டுதலோடு தொடங்கிய தேர் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல் வெகு விமர்சையாக நடைபெற்றது. 30 அடி உயரத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரில் தாய் கருமாரியம்மன் எழுந்தருள, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனர். நாள்தோறும் அம்மனுக்கு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றன.