கார்த்திகை மாதம் தொடங்கியதை தொடர்ந்து, சேலம் மாவட்டம் ஆத்தூர் வெள்ளை விநாயகர் கோவிலில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து 48 நாட்கள் விரதத்தை தொடங்கியுள்ளனர். அதிகாலை முதலே குவிந்த பக்தர்கள், ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை செய்து, குருசாமியிடம் மண்டியிட்டு பக்தி பரவசத்துடன் விரதத்தை துவக்கினர். சபரிமலை செல்லும் 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கார்த்திகை முதல் நாளிலிருந்து விரதத்தை கடைபிடிக்கின்றனர்.