சேலம் மாவட்டத்திற்கு வருகை தந்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இன்று (நவ.19) காலை சுமார் 23.5 கி.மீ. தூரம் நடைப்பயணம் மேற்கொண்டு சொனப்பாடி என்ற மலைக்கிராமத்திற்கு சென்றார். அங்கு மருத்துவ கட்டமைப்புகள் மற்றும் 'மக்களை தேடி மருத்துவம்' திட்டம் குறித்து மலைவாழ் மக்களிடம் கேட்டறிந்து கலந்துரையாடினார். இந்த நிகழ்வின் போது துறைச் சார்ந்த அதிகாரிகளும் உடனிருந்தனர்.