சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தென்னங்குடி பாளையம் ஊராட்சிக்குட்பட்ட புது பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் வெங்கடாசலம் (80) என்ற முதியவர் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், ஆத்தூர் தீயணைப்புத் துறையினர் 40 அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி முதியவரின் உடலை மீட்டனர். ஆத்தூர் ஊரக போலீசார் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.