சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே முல்லைவாடி பகுதியை சேர்ந்த முத்தம்மாள் இன்று காலை சந்தனகிரி சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சாலையை கடக்க முயன்ற போது, சென்னையில் இருந்து கோவை நோக்கிச் சென்ற பார்சல் லாரி அவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். நகர போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.