சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு அவரது சித்தப்பா பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். வயிற்று வலி காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவிக்கு 7 மாத கர்ப்பம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். பெற்றோரின் புகாரை அடுத்து, சிறுமியின் சித்தப்பாவைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.