ஆத்தூர் காய்ந்த புல் பூண்டுகளில் தீவிபத்து

1009பார்த்தது
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சிக்குட்பட்ட அரங்கபாலா நகர் ஆட்கொல்லி பாலம் பகுதியில் வசிஷ்ட நதிக்கு செல்லும் கால்வாயில், முட்புதர்கள், புல் பூண்டுகள் மற்றும் குப்பைகள் குவிந்திருந்ததால் திடீரென கரும்புகை மூட்டம் ஏற்பட்டது. அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், ஆத்தூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் அரை மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாகி சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Job Suitcase

Jobs near you