சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சொக்கநாதபுரம் சிவன்ராஜ் என்பவரது விவசாய தோட்டப் பகுதியில் உள்ள புல் பூண்டுகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் புகைமூட்டம் காணப்பட்டது. உடனடியாக ஆத்தூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.