ஆத்தூர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா

1பார்த்தது
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே செல்லியம்பாளையம் பகுதியில் முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெய்சங்கரன் மற்றும் ஆத்தூர் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ரஞ்சித் குமார் தலைமையில் ஜெயலலிதா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதிமுக பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர், பொதுமக்களுக்கும் பள்ளி குழந்தைகளுக்கும் இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதில் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி