ஆத்தூர் வீட்டின் அருகே மரத்தில் பச்சை பாம்பு உயிருடன் மீட்பு

4பார்த்தது
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கொத்தாம்பாடி பெரியார் நகர் பகுதியில் சந்திரா என்பவர் வசித்து வருகிறார். அவரது வீட்டின் அருகே இருந்த மரத்தில், ஓணானை விழுங்கிய நிலையில் பச்சை பாம்பு ஒன்றைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக ஆத்தூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தார். நிலைய அலுவலர் அசோகன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, நான்கு அடி நீளமுள்ள பச்சை பாம்பை உயிருடன் பிடித்தனர். பாம்பு ஓணானை விழுங்கிய நிலையில் ஆக்ரோஷமாக காணப்பட்டது. தீயணைப்புத் துறையினர் பாம்பை வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்தி