ஆத்தூர் கொட்டி தீர்த்த கனமழை குளிர்ச்சியான சூழல்

0பார்த்தது
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், கடந்த இரு நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து, திடீரென ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த கனமழையால் பெத்தநாயக்கன்பாளையம், புத்திரகவுண்டம்பாளையம், ஒட்டப்பட்டி, ஓலப்பாடி, சின்ன பசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி