சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தென்னங்குடி பாளையம் பகுதியைச் சேர்ந்த குமார், தனது மனைவி புனிதாவுடன் திருவிழா சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பும்போது, சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை தேவியாக்குறிச்சி பகுதியில் பின்னால் வந்த கார் மோதி விபத்துக்குள்ளானதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த கணவர் குமாரை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து தலைவாசல் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.