நீதித்துறைபத்திரிக்கை துறைபாதுகாப்புசட்டம் வக்கீல்பாலுபேட்டி

0பார்த்தது
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்புக்கான பார் கவுன்சில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் போட்டியிடும் தற்போதைய இணைத் தலைவர் வழக்கறிஞர் பாலு, சேலம் மாவட்டம் ஆத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பார் கவுன்சில் நிர்வாகிகளுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர், மாவட்ட நீதிபதிகளை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக பரிந்துரைக்கும் போது, மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்களையும் ஏன் பரிந்துரைக்கக்கூடாது என வலியுறுத்தினார். மேலும், முன்னுரிமை வாக்கு முறை அவசியமா என மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும், இளம் வழக்கறிஞர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை 3000 ரூபாயிலிருந்து 5000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். வழக்கறிஞர்களின் நல நிதி 10 லட்சத்திலிருந்து 25 லட்சமாகவும், கிளிர்களுக்கு 7 லட்சத்திலிருந்து உயர்த்தப்பட வேண்டும் என்றும், பத்திரிக்கையாளர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு தனி பாதுகாப்பு சட்டம் கொண்டுவர வலியுறுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி