கல்பகனூர் குடும்ப தகராறு.. பெண் தூக்கிட்டு தற்கொலை

57பார்த்தது
கல்பகனூர் குடும்ப தகராறு.. பெண் தூக்கிட்டு தற்கொலை
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே கல்பகனூர் கிராமத்தை சேர்ந்த சங்கர் மனைவி அங்கம்மாள் (35) இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் குடும்பத்தில் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று இரவு இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் இன்று தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் மனைவி அங்கம்மாள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்க்கும் போழுது அங்கம்மாள் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஊராட்சிப் போலீசார் உடலை பிரேத உடற்கூறு ஆய்வுக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி