ஆத்தூர் மினி சரக்கு வேன் மோதி கூலித் தொழிலாளி பலி

1பார்த்தது
ஆத்தூர் மினி சரக்கு வேன் மோதி கூலித் தொழிலாளி பலி
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மல்லிகைகரை அரசநத்தம் பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் (35) என்பவர், தாண்டவராயபுரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த மினி சரக்கு வேன் மோதி விபத்துக்குள்ளானதில் தலையில் பலத்த காயமடைந்தார். அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.