சேலம் மாவட்டம் வாழப்பாடியில் திமுக சார்பில் நடைபெற்ற பரப்புரை பொதுக்கூட்டத்தில் பேசிய கழக கொள்கை பரப்புச் செயலாளர் திண்டுக்கல் லியோனி, என்.டி.ஏ. கூட்டணி என்பது தேசிய ஜனநாயக கூட்டணி அல்ல, தேசத்தை சீரழிக்கும் கூட்டணியாக உள்ளதாகவும், தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக சந்தர்ப்பவாதிகளால் ஏற்படுத்தப்பட்ட கூட்டணி என்றும் விமர்சித்தார். மேலும், த.வெ.க. தலைவர் விஜய்-யை நம்பி ஆட்சியை ஒப்படைத்தால் குத்தாட்டம் தான் போடுவார், திட்டங்கள் எதுவும் மக்களுக்கு இருக்காது என்பதை அவரது கூட்டத்தில் நிரூபித்து விட்டார் என்றும் அவர் சாடினார்.