ஆத்தூர் கிணற்றில் விழுந்த ஆண் மயில் உயிருடன் மீட்பு

0பார்த்தது
சேலம் மாவட்டம் ஆத்தூர் கண்ணாடி மில் பகுதியில் இந்திரஜித் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் ஆண் மயில் தவறி விழுந்தது. தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, கயிறு மூலம் கிணற்றில் இறங்கி மயிலை பத்திரமாக மீட்டனர். பின்னர், மயிலை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். காயமடைந்த மயிலுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு, பாதுகாப்பாக காப்பு காட்டில் விடப்பட்டது.