வாழப்பாடி வனப்பகுதியில் முயல் வேட்டையாடிய நபர் கைது

65பார்த்தது
வாழப்பாடி வனப்பகுதியில் முயல் வேட்டையாடிய நபர் கைது
சேலம் மாவட்டம் வாழப்பாடி வனப்பகுதியில் வனச்சரக அலுவலர் அன்னப்பன் தலைமையில் வனப் பணியாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிச்சி பிரிவு செட்டிபட்டி காப்புக்காடு பகுதியில் பெருமாள் கோயில் அருகே தணிக்கை பணியில் மேற்கொண்டிருந்த போது வழியாக வந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த நபர் கம்பி வலை விரித்து முயல் வேட்டையாட முயன்றது தெரியவந்தது.
மேலும் விசாரணையில் அந்த நபர் குறிச்சி பகுதியைச் சேர்ந்த முத்து என்பதும் தெரியவந்தது. அவரிடம் இணக்க கட்டணமாக 30 ஆயிரம் ரூபாய் விதிக்கப்பட்டு எச்சரித்து வனத்துறையினர் அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி