சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் தெற்கு தில்லை நகரில் உள்ள மாரியம்மன் திருக்கோயிலில் ஊரணி பொங்கலை முன்னிட்டு சிறப்பு அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெயசங்கரன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நகரக் கழக செயலாளர், கழக நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் விழாக் குழுவினர் கலந்துகொண்டனர்.