சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் பகுதியில் உள்ள பழமையான தர்மராஜர், திரௌபதி அம்மன் கோவிலில், இரண்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு அடுத்த மாதம் 4-ம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேக விழாவிற்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. கணபதி ஹோமம், தீர்த்த குடத்திற்கான சிறப்பு பூஜைகள், யாகங்கள், முகூர்த்தக்கால் பூஜை, தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. பக்தர்கள் முகூர்த்த காலை தோளில் சுமந்து ஊர்வலமாக கொண்டு வந்து, பால், நவதானியம் இட்டு கோஷமிட்டு நட்டனர். பின்னர் பொதுமக்களுக்கு கங்கணம் கட்டும் நிகழ்ச்சியும், அன்னதானமும் வழங்கப்பட்டது.