சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மஞ்சுனி கிராமத்தில் ஆதிதிராவிட நலத்துறைக்கு சொந்தமான மூன்று ஏக்கர் 15 சென்ட் நிலத்தை தனிநபர்களிடமிருந்து வருவாய்த்துறையினர் மீட்டனர். மீட்கப்பட்ட நிலத்தில் மீண்டும் விவசாயப் பணி நடைபெறுவதை எதிர்த்து பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பு அறிவித்து வீடுகளில் கருப்பு கொடி கட்டினர். தகவல் அறிந்து வந்த தாசில்தார் பாலாஜி, காவல்துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து, விளம்பர பதாகைகள், பேனர்கள் மற்றும் கருப்புக்கொடிகள் அகற்றப்பட்டன.