வாழப்பாடி பேரூராட்சி காளியம்மன் நகர் பகுதியில், பாப்பான் ஏரியின் பிரதான பாசன வாய்க்காலில் ரூ. 48 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் சாக்கடை அமைக்கும் திட்டப்பணி தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் வழக்கறிஞர் ஆர். ராஜேந்திரன் தலைமையில், தோண்டப்பட்ட பள்ளத்தில் இறங்கி அமர்ந்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில்
போராட்டம் கைவிடப்பட்டது.