சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தாண்டவராயபுரம் கிராமத்தில் உள்ள சக்தி மாரியம்மன் கோவிலின் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, கடந்த 20ஆம் தேதி மகா கணபதி பூஜை மற்றும் திருக்குடமுழுக்கு விழா தொடங்கியது. இதைத் தொடர்ந்து முளைப்பாரி ஊர்வலம், நான்கு கால யாக பூஜைகள் நடைபெற்றன. ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தர் தனது சொந்த கிராமமான தாண்டவராயபுரத்தில் நடைபெற்ற இந்த குடமுழுக்கு விழாவில் குடும்பத்தினருடன் பங்கேற்றார். இந்நிகழ்வில் எஸ்.ஆர்.எம். கல்வி குழும இணை வேந்தர்கள் ரவி பச்சமுத்து, சத்யநாராயணன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.