ஆத்தூர் அரசுபஸ்சில் ஊர் பெயர்மாறி வந்ததால் பயணிகள் குழப்பம்

2பார்த்தது
சேலம் மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலையத்தில் வெள்ளிமலை செல்லும் அரசு பேருந்தில், டிஜிட்டல் பெயர் பலகையில் ஊரின் பெயர் மாறி மாறி வந்ததால் பயணிகள் குழப்பமடைந்தனர். கள்ளக்குறிச்சி, மேட்டூர், துறையூர், தம்மம்பட்டி, சூளாங்குறிச்சி, கரிய கோவில் என பெயர்கள் வந்தபோதும் வெள்ளிமலை பெயர் இல்லாததால் பயணிகள் அவதிப்பட்டனர். ஓட்டுநர் நரசிங்கபுரம் பகுதியில் பேருந்தை நிறுத்தி, வெள்ளிமலை பெயர் வந்தவுடன் இயக்கினார். இதனால் பயணிகள் நிம்மதி அடைந்தனர்.