சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தெற்கு காடு பகுதியில் விவசாயி மணிகண்டனுக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள 70 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த மயிலை தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு உயிருடன் மீட்டனர். மீட்கப்பட்ட மயிலை வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.