ஆத்துார் நகராட்சி, 18வது வார்டு, கரிகாலன் தெருவில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு சாக்கடை மீது போடப்பட்டிருந்த கான்கிரீட் மேற்பகுதி பெயர்ந்து, துர்நாற்றம், கொசுத்தொல்லை, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள், குறிப்பாக குழந்தைகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். ஆத்துார் நகராட்சி நிர்வாகம் உடனடியாக இப்பகுதியை சீரமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.