ஆத்தூர் உட்கோட்ட காவல் துறையினருக்கு உடல் பரிசோதனை

0பார்த்தது
சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியைச் சேர்ந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் தன்ராஜ், பணியின்போது மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்து உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, சேலம் சரக டிஐஜி ஏகே கிரி உத்தரவின் பேரில், சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் பணியாற்றும் 200க்கும் மேற்பட்ட போலீசாருக்கு ரத்த அழுத்தம், நாடி துடிப்பு, ஆக்ஸிஜன் அளவு, சர்க்கரை அளவு உள்ளிட்ட உடல்நலப் பரிசோதனைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆத்தூர் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இந்தப் பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன.