சேலம் மேற்கு சட்டமன்ற பாமக உறுப்பினர் அருள் காரை வழிமறித்து அன்புமணி ஆதரவாளர்கள் தாக்கியது தொடர்பாக இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக இரு தரப்பினரும் ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அன்புமணி ஆதரவாளர்களை மட்டும் போலீசார் கைது செய்வதாகவும், எம்எல்ஏ அருள் தரப்பினர் மீது நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடிப்பு செய்வதாகவும் குற்றம் சாட்டி, பாமக முன்னால் சட்டமன்ற உறுப்பினரும், அன்புமணி ஆதரவாளருமான கார்த்தி தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் ஏத்தாப்பூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டு நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வாழப்பாடி காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு மாபெரும் போராட்டம் நடத்த போவதாக தெரிவித்தனர்.