பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில் பிரதோஷம்

2பார்த்தது
சேலம் மாவட்டம் வாழப்பாடி பேளூர் ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் திருக்கோயிலில் இன்று பிரதோஷம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பிரதோஷத்தை முன்னிட்டு நந்தீஸ்வரருக்கும் மூலவருக்கும் தேன், பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து மஹா தீபாராதனை நடைபெற்றது. பின்னர், நந்தி வாகனத்தில் சிவன் பார்வதி அண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கோயில் வளாகப் பகுதியில் ஊர்வலமாகச் சென்று சன்னதி அடைந்தது. பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் இதில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி