அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஈரான் உச்சத் தலைவர் ஆயத்துல்லாஹ் கமேனி படுகொலை செய்யப்பட்டார். இதனைக் கண்டித்து சேலம் மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள தந்தை பெரியார் சிலை முன்பு தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் திமுக கூட்டணி கட்சியினர் இணைந்து அமெரிக்கா-இஸ்ரேல் போரை நிறுத்தக் கோரியும், அமெரிக்கா இஸ்ரேல் நாட்டை கண்டித்து பயங்கரவாதத்தை வன்மையாக கண்டிப்பதாகவும் 50க்கும் மேற்பட்டோர் கருப்பு சட்டை அணிந்தும் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் திமுக கூட்டணி கட்சியினர் இதில் கலந்து கொண்டனர்.