சேலம் மாவட்டம் ஆத்தூரில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி, 'வாக்காளராக இருப்பதில் பெருமிதம் கொள்வோம் வாக்களிக்க தயாராகுங்கள்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. வருவாய் கோட்டாட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான தமிழ்மணி இப் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய பேரணி, உடையார்பாளையம் வழியாக நான்கு ரோடு சந்திப்பு பகுதியில் நிறைவடைந்தது. இதில் தனியார் கல்லூரியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.