ஆத்தூர் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

6பார்த்தது
சேலம் மாவட்டம், ஆத்தூர் பேருந்து நிலைய நுழைவாயில் பகுதியில் 50க்கும் மேற்பட்ட பழம் மற்றும் பூக்கடைகள் நடைபாதை சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், ஆத்தூர் நகராட்சிப் பணியாளர்கள், காவல்துறை பாதுகாப்போடு சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றினர். கடைகளை அகற்ற வந்த நகராட்சிப் பணியாளர்களிடம், கடை உரிமையாளர் ஒருவர், தாங்கள் 15 லட்சம் வைப்புத்தொகை கட்டி கடை எடுத்ததாகவும், ஆனால் தற்போது 5 லட்சம் வைப்புத்தொகை வைக்கப்பட்டிருந்தபோதும் கடை எடுக்க ஆள் இல்லை என்றும் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி