ஆத்தூர் தெருவில் தேங்கிய சாக்கடை கழிவுநீர் அகற்ற கோரிக்கை

1013பார்த்தது
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சிக்குட்பட்ட 12வது வார்டு ராஜாஜி தெரு பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பல ஆண்டுகளாக கழிவுநீர் கால்வாய் முறையாக தூர்வாரப்படாததால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும், கொசுத்தொல்லை அதிகரித்து உடல்நலம் பாதிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குழந்தைகளுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதால் உடனடியாக கழிவுநீர் கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். இதே நிலை நீடித்தால் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி