சேலம் மாவட்டம் ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் மற்றும் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. வருவாய் கோட்டாட்சியர் தமிழ்மணி கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். தொடர்ந்து, 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பைக் பேரணியையும் கொடி அசைத்து துவக்கி வைத்தார். வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை வலியுறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பேரணி நடைபெற்றது.