ஆத்தூர் சேரும் சகதியுமான சாலை பொதுமக்கள் வாகன ஓட்டி அவதி

0பார்த்தது
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையம், வீர கவுண்டனூர் ஊராட்சிக்குட்பட்ட மாரியம்மன் கோவில் பகுதியில் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பொதுமக்களுக்கு சென்று வர சாலை முறையாக அமைக்கப்படவில்லை. கடந்த இரண்டு நாட்களாக பெய்த சாரல் மழையால் அப்பகுதி சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் மற்றும் நடந்து செல்வோர் கீழே விழும் சூழல் நிலவுகிறது. எனவே, சாலையை சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி