சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ராமநாயக்கன்பாளையத்தில் நேற்று பெய்த கனமழையால், பழமை வாய்ந்த புளியமரம் கிளை முறிந்து வீட்டின் மேல் விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக சரசு என்ற மூதாட்டி மற்றும் அவரது பேரன், பேத்தி உயிர் தப்பினர். வீடு முற்றிலும் சேதமடைந்ததால், அரசு நிவாரணம் வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.