சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே இலுப்பநத்தம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமசாமி (55) தனது புதிய வீட்டிற்கு கடந்த சில நாட்களுக்கு முன் புதுமனை புகுவிழா நடத்தினார். இதற்காக வீரகனூர் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் இருந்து 50 பேருக்கு இட்லி, வெண்பொங்கல், சாம்பார் உள்ளிட்ட உணவுப் பொருட்களை வாங்கி வந்துள்ளார். இந்த உணவைச் சாப்பிட்ட 20க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. உடல்நலம் பாதிக்கப்பட்ட இவர்கள் ஆத்தூர் மற்றும் தலைவாசல் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.