ஆத்தூர்: நீர் வீழ்ச்சியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

1424பார்த்தது
ஆத்தூர் அருகே கல்லாநத்தம் ஊராட்சிக்குட்பட்ட முட்டல் கிராமத்தில் உள்ள முட்டல் ஆணைவாரி நீர்வீழ்ச்சி, விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகையால் களைகட்டியுள்ளது. கல்வராயன் மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சிக்கு சேலம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வருகின்றனர். வனத்துறையின் பராமரிப்பில் உள்ள இங்குள்ள சுற்றுலா பூங்காவில் மான், யானை போன்ற கண் கவர் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகள் நீர்வீழ்ச்சியில் உற்சாக குளியலிட்டு, பூங்கா பகுதிகளை கண்டு ரசித்தும், படகு சவாரி செய்தும் மகிழ்கின்றனர்.

தொடர்புடைய செய்தி